'திருமணம் முடிந்து'... 'பெண்ணின் வீட்டிற்கு'... 'மாட்டு வண்டியில் சென்ற புதுமணத் தம்பதிகள்'... இதுதான் காரணமாம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Dec 02, 2019 12:43 PM
திருமணத்தில் பொதுவாக தங்களது ஆசையை நிறைவேற்றிக்கொள்ள மணமக்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்புவர். அப்படி இங்கு ஒரு தம்பதி செய்த காரியத்துக்கு பாராட்டுக்கள் குவிந்துள்ளன.
பொள்ளாச்சி வழியில் புதுமண தம்பதிகள் மாட்டு வண்டியில் உற்சாகமாக சென்ற விஷயமே பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. கோவையை சேர்ந்த அசோக் என்பவருக்கும், பொள்ளாச்சி அருகே உள்ள காரச்சேரியை சேர்ந்த சுகன்யா என்பவருக்கும், ஈச்சனாரி விநாயகர் கோவிலில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்தப் பிறகு, தம்பதிகள் பெண்ணின் வீட்டிற்கு செல்வது வழக்கம்.
அந்தவகையில் காரச்சேரியில் உள்ள பெண்ணின் வீட்டிற்கு, புதுமணத் தம்பதிகள் காரை பயன்படுத்தாமல், மாட்டு வண்டியில் சென்றுள்ளனர். மழை பெய்தாலும், குடைப் பிடித்தபடியே உற்சாகமாக சென்றனர். அவர்களை வழியில் செல்வோர் வித்தியாசமாகவும், ஆச்சரியத்துடன் பார்த்தாலும், அழிந்து வரும் காங்கேயம் காளையை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாட்டு வண்டியில் பயணம் செய்ததாக, அந்த புதுமணத் தம்பதிகள் கூறியுள்ளனர். அவர்களுக்கு பாராட்டுகள் குவிந்துள்ளன.