'அழுகிய நிலையில் இளம் ஜோடியின் சடலம்'.. 'காதலை ஏற்காததால்' விபரீத முடிவா? பதறவைத்த சம்பவம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Siva Sankar | Dec 01, 2019 02:26 PM
பெங்களூரு ஐ.டி கம்பெனியில் வேலை செய்து வந்தவர்கள் கேரள மாநிலம் திரிசூரைச் சேர்ந்த அபிஜித் மோகன்(25), ஸ்ரீ லட்சுமி (21) ஜோடிகள். இந்த ஜோடிகள் இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்பட்ட நிலையில், இவர்கள் வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலை இருவீட்டாரும் ஒப்புக் கொள்ளாததாகத் தெரிகிறது.
தங்கள் காதலை ஏற்காத பெற்றோர்களிடம், இருவரும் கடந்த அக்டோபர் மாதம் முதலே தொடர்பு கொள்ளவில்லை என தெரிகிறது. இதனை அடுத்து, இவர்களின் பெற்றோர், இவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை என போலீஸாரிடத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரின் பேரில், விசாரித்த போலீஸார், அண்மையில் இருவரின் சடலத்தையும் அழுகிய நிலையில் மீட்டுள்ளனர். சாதிமறுப்பு காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஜோடிகள் இருவரும் தற்கொலை செய்திருக்கிறார்கள் என முதற்கட்ட விசாரணையில் போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலுன் விசாரணை நடத்தி வருகின்றனர்.