‘தர்பார் படம் ஹிட் ஆகணும்’!.. ‘அலகு குத்தி’ ரசிகர்கள் வெறித்தனமான பிரார்த்தனை..! எந்த ஊர்ல தெரியுமா..?

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Jan 09, 2020 01:49 PM

நடிகர் ரஜினிக்காந்த் நடித்த தர்பார் திரைப்படம் வெற்றிபெற வேண்டி அவரது ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்டு, அலகு குத்தி வழிபட்டனர்.

Rajinikanth fans special prayers for Darbar movie success

ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படம் தர்பார். இத்திரைப்படம் திரையரங்களில் இன்று வெளியாகியுள்ளது. வழக்கம்போல ரஜினியின் ரசிகர்கள் இதை திருவிழா போல கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் தர்பார் திரைப்படம் வெற்றியடைய வேண்டும் என ரசிகர்கள் நூதன பிரார்த்தனைகளை மேற்கொண்டனர். குறிப்பாக மதுரையில் மண்சோறு சாப்பிட்டும், அலகு குத்தியும் ரசிகர்கள் வழிபாடு நடத்தினர். மேலும் தர்பார் சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதித்துள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்

Tags : #RAJINIKANTH #MADURAI #DARBAR #DARBARTHIRUVIZHA #DARBARPONGAL