'ஒரு வரைமுறை வேணாமா?'.. 'இதெல்லாம் மெட்ரோவுல செய்ற காரியமா?'.. வைரலான வீடியோ.. வறுக்கும் நெட்டிசன்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Dec 10, 2019 10:25 AM

டெல்லி மெட்ரோ ரயிலுக்குள் இளம் ஜோடி செய்த காரியம் இணையதளங்களில் வீடியோவாக வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Delhi couple caught kissing inside metro rail video becomes viral

முன்னதாக கடந்த ஜூலை மாதம் டெல்லி மெட்ரோ ரயில்வே ஸ்டேஷனில் அமர்ந்துகொண்டிருந்த இளம் ஜோடி பொது இடம் என்றும் கூட பாராமல் அநாகரிகமாக நடந்துகொண்ட சம்பவம் சிசிடிவி காட்சிகளில் பதிவானதோடு, கொஞ்ச நாள் கழித்து அந்த வீடியோ ஆபாச இணையதளங்களில் வெளியானது.

இதனையடுத்து இந்த மாதிரியான அநாகரிக செயல்களைச் செய்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் டெல்லி மெட்ரோ ரயிலில் நின்றுகொண்டே பயணித்த இளம் ஜோடி, பக்கத்தில் இருந்தவர்களை ஒரு பொருட்டென்றே கருதாமல் ஒருவருக்கு ஒருவர் முத்தம் பரிமாறிக்கொண்டிருந்துள்ள காட்சி இணையதளத்தில் வீடியோவாக வலம் வருவதை அடுத்து

 

நெட்டிசன்களின் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.இப்படியான செயல்களால் பயணிகளின் பிரைவேசி பறிபோவதாக குற்றம் சாட்டி இந்த காரியங்களை செய்பவர்களை எச்சரிக்கும் டெல்லி மெட்ரோ,  தனிநபர் அந்தரங்கங்களை இப்படி வீடியோ எடுப்பதையும் கண்டிக்க வேண்டும் என்றும் சிலர் கருத்துக்களை கூறியுள்ளனர். 

Tags : #DELHI #METRO #RAIL #DMRC #COUPLE