'90'ஸ் கிட்ஸ்' ரொம்ப பாவம் பாஸ்'...'சகதியில் புரண்டு 'ஃபோட்டோ ஷூட்'...வைரலாகும் கேரள ஜோடி!
முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்By Jeno | Nov 23, 2019 04:18 PM
திருமணம் என்பது ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் முக்கியமான ஒரு தருணம். அதனை பலரும் பல விதங்களில் கொண்டாடுகிறார்கள். திருமணம் நடக்கும் அந்த ஒரு நாளுக்காக பல லட்சங்கள் செலவிடுவோரும் உண்டு. எளிமையான முறையில் திருமணம் செய்வோரும் உண்டு.
கேரளாவில் எப்போதுமே திருமணங்கள் சற்று விமரிசையாக நடக்கும். திருமணத்திற்கு முன் திருமணத்திற்கு பின் என தம்பதிகள் ஃபோட்டோ ஷூட் நடத்துவதும் வழக்கம். ஆனால் கேரளாவில் சமீபத்தில் திருமணமான ஜோடியின் புகைப்படங்கள் ட்விட்டரில் வைரலாகி வருகின்றன. அதற்கு முக்கிய காரணம், ஃபோட்டோ ஷூட்டை இப்படி எல்லாம் எடுக்கலாமா என்ற கற்பனை தான்.
நாற்று நட ஏர் உழுது வைத்திருந்த விவசாய நிலத்தில் தம்பதிகள் இருவரும் சகதியில் உருண்டு, புரண்டு புகைப்படங்களாக எடுத்து தள்ளியுள்ளார்கள். இதுபோன்று சேறு சகதியில் ஜோடிகளின் புகைப்படங்கள் வெளிநாடுகளில்தான் எடுக்கப்பட்டு வந்தது. அந்த ட்ரெண்டை தற்போது இந்த ஜோடி தான் இந்தியாவில் ஆரம்பித்துள்ளது. இதனை நெட்டிசன்கள் பலரும் பரவலாக கலாய்த்து வருகிறார்கள். சிலர் 90-ஸ் கிட்ஸ் ரொம்ப பாவம், இதை எல்லாம் பார்த்தால் அவர்களின் மனது தாங்காது என கிண்டலாக பதிவிட்டுள்ளார்கள்.
மேலும் சிலர் இதை பார்க்க டிராமா போன்று இருக்கிறது. இயற்கையாக இல்லை என்றும் கருத்து தெரிவிக்கின்றனர். எப்படி இருந்தாலும் இந்த ஒரே ஃபோட்டோ ஷூட் மூலம் இந்த தம்பதி இணையத்தில் வைரலாகி விட்டார்கள்.