‘திருமண விழாவிற்கு சென்ற தம்பதி’... ‘எதிரே வந்த கார் நேருக்கு நேர் மோதி’.. ‘சென்னை அருகே நடந்த பரிதாபம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Dec 01, 2019 04:30 PM

சென்னை அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், பெண் உள்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

kerala old age couple met accident near chennai 2 died

கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் ராஜசேகர் - சாந்தா தம்பதி. இவர்களது மகள், செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் வசித்து வருகிறார். மகளைப் பார்ப்பதற்காக, கல்பாக்கம் வந்துள்ளனர். பின்னர் சென்னையை அடுத்த பூந்தமல்லியில் நடைபெறும், திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக தம்பதி இருவரும் கார் ஒன்றில் சென்றுள்ளனர். காரை கல்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் கண்ணன் என்பவர் ஓட்டிச்சென்றுள்ளார்.

சிறுதாவூர் அடுத்த கருங்குழிப்பள்ளம் அருகே இவர்களது கார் சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிரே வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, ராஜசேகர் சென்ற கார் மீது மோதியது. இதில் ஓட்டுநர் மற்றும் சாந்தா ஆகியோர் படுகாயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயம் அடைந்த ராஜசேகர் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த விபத்து குறித்து திருப்போரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #ACCIDENT #DIED #COUPLE