‘ஒன்றரை வயது’ குழந்தையுடன்.. வீட்டுக்கு திரும்பும் வழியில்.. ‘இளம் தம்பதிக்கு’ நொடிப்பொழுதில் நடந்த ‘கோர விபத்து’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Dec 09, 2019 03:24 PM

கால்வாய்க்குள் கார் கவிழ்ந்த விபத்தில் இளம் தம்பதி ஒன்றரை வயது குழந்தையுடன் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

Kanyakumari Accident Couple Baby Die As Car Falls Into Canal

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தை அடுத்த அஞ்சு கண்டரையை சேர்ந்த அனிஷ் (30) என்பவர் நேற்று தன் மனைவி மஞ்சு (27) மற்றும் ஒன்றரை வயது குழந்தை அமர்நாத் ஆகியோருடன் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் அருகிலிருந்த கால்வாய்க்குள் கவிழ்ந்துள்ளது.

நொடிப்பொழுதில் நடந்த இந்த கோர விபத்தில் தண்ணீருக்குள் கவிழ்ந்த கார் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டதால், கதவை திறக்க முடியாமல் அனீஷ், மஞ்சு மற்றும் குழந்தை அமர்நாத் ஆகியோர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்துள்ளனர். நீண்ட நேரத்திற்கு பிறகே அவ்வழியாக சென்றவர்கள் கால்வாய்க்குள் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி இருப்பதைப் பார்த்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் உடனடியாக கார் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த 3 பேரையும் மீட்டுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் அவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் 3 பேரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #ACCIDENT #KANYAKUMARI #COUPLE #HUSBAND #WIFE #BABY