இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Feb 03, 2020 10:55 AM

1. ஆன்லைன் மூலம் அரசே டிக்கெட் விற்பனை செய்யும் விவகாரத்தில் முடிவு எட்டப்பட்டுள்ளது. விரைவில் விலை நிர்ணயிக்கப்படும். பண்டிகை காலங்களில் வெளியாகும் திரைப்பட டிக்கெட் விலையை நிர்ணயம் செய்யவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

Tamil News Headlines Read Here For More February 3rd

2. கேரளாவில் ஏற்கனவே இருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், மூன்றாவதாக ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

3. ஆந்திர மாநிலத்தில் கணவரை இழந்த பெண்கள், உடல் ஊனமுற்றோர் உள்ளிட்ட சுமார் 42 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு வீடு தேடிச் சென்று அவர்களின் ஓய்வூதியத் தொகையை வழங்க முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

4. ஹெச்.ஐ.வி. மற்றும் ஃபுளூ தொற்றுக்கான மருந்து ஆகிய இரண்டையும் கலந்துக் கொடுத்ததால், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 71 வயது மூதாட்டியின் உடல்நிலை தேறியதாக தாய்லாந்து மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

5. ஒடிசா மாநிலம் குர்தா எனுமிடத்தில் உள்ள சிலிக்கா ஏரியில் மீனவர்களை சுமந்து சென்ற படகு கவிழ்ந்து 25 பேர் நீரில் மூழ்கினர்.

6. காயம் காரணமாக நியூசிலாந்து தொடரில் இருந்து ரோகித் சர்மா விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

7. ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே தங்கையுடன் ஆடு மேய்க்க சென்ற 9 வயது சிறுமி மாயமான நிலையில் 2 நாட்களுக்கு பின் கிணற்றிலிருந்து சலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

8. பாபநாசம் அருகே, கட்டுமான பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருந்து பழமையான இரண்டு ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.

9. நிபா வைரசை வெற்றிகரமாக முறியடித்தது போல் விரைவில் கொரோனா வைரசையும் நீக்கிவிடுவோம் என்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார் .

10. சீனாவில் உகான் நகரைத் தொடர்ந்து, கிழக்குப் பகுதியில் உள்ள பெரிய நகரமான வென்சுவ் (Wenzhou) நகர மக்கள் வெளியேறும் சாலைகள் அடைக்கப்பட்டு மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

Tags : #CRICKET #AIADMK #DMK #KLRAHUL #CHENNAI #CHINA