‘பாலூட்டிக் கொண்டிருந்த’ பெண்ணின் தாலிச் செயினை பறித்த கையோடு.. நபர் செய்த காரியம்.. ‘கடைசியில் நடந்த தரமான ட்விஸ்ட்!’

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Feb 05, 2020 06:54 PM

சென்னை அருகே குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டிருந்த பெண்ணிடமிருந்து தாலி செயினை பறித்துக்கொண்டு தப்பி ஓடிய நபர் மற்றொரு பெண்ணிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட போது, பொதுமக்களிடம் பிடிபட்டதை அடுத்து, அவருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசிடம் ஒப்படைத்தனர்.

man snatches womans chain when she feeds her wife

பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் அண்ணனூர் பாலாஜி நகரில் ஆசிரியை மேனகா என்பவர் வந்தது வீட்டில் நிகழ்ந்துள்ளது. ஆசிரியை மேனகா என்பவர் தனது குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டிருந்த போது அவரது வீடு புகுந்த மர்ம நபர் அவரது 6 சவரன் தங்கத்தாலி செயினை பறித்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளார்.

அதன் பின்னர் அதே பகுதியில் மோகனாவின் வீட்டு அருகே உள்ள 18வது தெருவில் இருந்த சுலோச்சனா என்பவரிடம் இந்த மர்ம நபர் கைவரிசை காட்டியுள்ளார். ஆம், சுலோச்சனாவுன் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர், சுலோச்சனாவின் செல்போனை பறித்துக்கொண்டு தப்ப முயன்ற போதுதான் அக்கம்பக்கத்தினர் சத்தம் கேட்டு திரண்டு வந்து அந்த நபரை பிடித்தனர்.

பிறகு அந்த நபருக்கு தர்ம அடி கொடுத்து பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரித்ததில் பிடிபட்ட நபர் 19 வயதாகும் பாபு என்பவர் என தெரியவந்தது. இதனையடுத்து அவரது கூட்டாளி விக்னேஷ் குமார் என்பவரையும் பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Tags : #THEFT #CHENNAI