‘லவ் பண்ண மாட்டியா?’...‘இளம் பெண்ணுடன் வீடியோ கால் பேசிக்கொண்டே’.. ‘இளைஞர் எடுத்த விபரீத காரியம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Feb 06, 2020 04:57 PM

மணிப்பூரைச் சேர்ந்தவர் 25 வயதேயான ஜோனாதன் பமோயி. சென்னை அண்ணாநகரில் தங்கியிருந்து ஹோட்டல் ஒன்றில் கடந்த 6 மாதங்களாக வேலை பார்த்து வந்த இவர் நேற்று (05.02.2020) மாலை, தான் பணிபுரிந்து வந்த ஹோட்டல் மேலாளரிடம் வீட்டுக்குச் செல்வதாகக் கூறிவிட்டு சென்றுள்ளார்.

youth commits suicide in video call for one side love

அதன் பின்னர் அன்று அவர் ஹோட்டலுக்குத் திரும்பி வரவுமில்லை, மறுநாளும் அவர் வேலைக்கு வரவில்லை என்பதால் சந்தேகமடைந்த மேலாளர் ஜோனாதனின் அறைக்குச் சென்று, அங்கிருந்த அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் சோதனை செய்ததில், படுக்கையறையில் உள்ள மின்விசிறியில் போர்வையால் ஜோனாதன் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்ததை கண்டனர்.

இதனையடுத்து போலீஸாரிடம் கொடுத்த தகவலின் அடிப்படையில், விரைந்து வந்த போலீஸார் ஜோனாதனின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் ஜோனாதனின் போனை பரிசோதித்ததில், தற்கொலைக்கு முன் ஜோனோதன் ஒரு பெண்ணிடம் வீடியோ காலில் பேசியது தெரியவந்ததை அடுத்து அப்பெண்ணை கண்டுபிடித்து போலீஸார் விசாரித்துள்ளனர்.

அப்போதுதான் அப்பெண், ‘ஜோனாதன் பமோயி, என்னை ஒருதலையாகக் காதலித்து வந்தார். அவரை  காதலிக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று வீடியோ காலில் பேசிக்கொண்டே தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்’ என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார்.  இது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

Tags : #CHENNAI #VIDEOCALL