தண்டவாளத்தைக் கடக்க முயன்ற மூதாட்டி... நொடியில் நிகழ்ந்த விபத்து... ரயிலுக்கு அடியில் சிக்கிக் கொண்டதால் பரபரப்பு...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Feb 05, 2020 05:42 PM

சென்னை பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற மூதாட்டி ரயிலுக்கு அடியில் சிக்கிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Granny cross the railway is trapped underneath the train

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருத்து இன்று காலை சென்னை - பெங்களூரு டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. ரயில் பேசின் பிரிட்ஜ் நிலையத்தை கடந்தபோது மூதாட்டி ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். இதை கண்ட ரயில் ஓட்டுநர் பிரேக் பிடித்துள்ளார். இதனால் லேசான வேகத்தில் சென்ற ரயில் மூதாட்டியின் மேல் மோதியுள்ளது.

இதையடுத்து தண்டவாளத்திலேயே விழுந்த மூதாட்டி ரயில் எஞ்சினுக்கு அடியில் சிக்கிக்கொண்டார். அதிர்ந்து போன ரயில் ஓட்டுனர் ரயிலை நிறுத்திவிட்டு கீழே வந்து பார்த்துள்ளார். மூதாட்டி ரயிலுக்கு அடியில் வெளியே வரமுடியாத நிலையில் சிக்கியிருப்பதைக் கண்டு ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் வந்து மூதாட்டியை பத்திரமாக மீட்டனர்.

லேசான காயமடைந்திருந்த மூதாட்டிக்கு முதலுதவி செய்து முடித்த பின்னர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

Tags : #CHENNAI #CENTRAL #TRAIN STATION #GRANNY #TRAPPED UNDER TRAIN