'சென்னையில் 200 மாநகர பேருந்துகள் இயக்கப்படும்...' 'அவசரப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்காக...' தமிழக அரசு அறிவிப்பு...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Mar 25, 2020 02:18 PM

தமிழகத்தில் உத்தரவிடப்பட்டுள்ள 144 தடையின் காரணமாக சென்னையில் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் 200 மாநகர பேருந்துகள் இயக்கப்படும்  என்ற தகவலை தமிழகஅரசு வெளியிட்டுள்ளது.

200 MTC buses will be operated for employees in Chennai

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு பல்வேறு வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மார்ச் 31வரை 144 தடை விதித்தது.

மேலும் நேற்று இரவு இந்தியமக்களிடம் காணொளி மூலம் பேசிய பிரதமர் நேற்று 6 மணி முதை வரும் 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் 144 தடை சட்டத்தை அமுலுக்கு கொண்டு வந்துள்ளார். இதையடுத்து தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என தமிழக முதல்வர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சென்னையில் மட்டும் இனி 200 அரசு பேருந்துகள், அத்தியாவசியப் பணிகளில், அவசரப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்காக இயக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும் சென்னையில் தாம்பரம், கூடுவாஞ்சேரி, பூந்தமல்லி, மணலி, நெற்குன்றம், தேனாம்பேட்டை, துரைப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

Tags : #MTCBUS #CHENNAI