'ப்ளஸ் டூ தேர்வில் 34,000 பேர் ஆப்சென்ட்...' கொரோனா வைரஸ் பரவுவதால் மாணவர்கள் பங்கேற்கவில்லை என தகவல்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Mar 25, 2020 01:41 PM

நேற்று(24-03-2020) நடைபெற்ற பன்னிரெண்டாம் வகுப்பு கடைசி பொதுத் தேர்வில் 34000 மாணவர்கள் பங்கேற்கவில்லை என்ற செய்தி வெளியாகி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

34000 students did not write the final exam of twelfth grade

மார்ச் மாதம் 2 ஆம் தேதி தொடங்கிய 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று (மார்ச் 25) முடிவடைந்துள்ளது. இத்தேர்வில் 19,166 தனித்தேர்வர்கள் உட்பட சுமார் 8,35,525 மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர்.

தற்போது தமிழகம் எங்கும் கொரோனா வைரஸ் பரவும் அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ள நிலையில் 12ஆம் வகுப்புக்கு கடைசி நேற்று நடைபெற்றது. இத்தேர்வில் சுமார் 34,000  மாணவர்கள் பங்கேற்கவில்லை என்ற செய்தி தற்போது வெளிவந்துள்ளது. மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 1500 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என தகவல்

தேர்வு எழுதும் மாணவர்களின்  எண்ணிக்கை குறைந்ததற்கு காரணம் கொரோனா வைரஸ் பரவும் அச்சம் எனவும் பரவலாக கூறப்படுகிறது. மேலும் தமிழக அரசு 24.03.2020 அன்று கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க 144 ஊரடங்கு சட்டத்தை அமல்படுத்தியது. இதனால் தமிழகத்தில் பேருந்து சேவை நேற்று காலை முதல் குறிப்பிட்ட சில வழித்தடங்களில் மட்டுமே இயக்கப்பட்டது. அதனால்தான் மாணவர்கள் வரவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் பெற்றோர்களின் அச்சமும் இதற்கு காரணமாக இருக்கலாம் என்று பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் போக்குவரத்து இல்லாததால்  சில மாவட்டங்களில் மாணவர்கள் தேர்வெழுத வந்தாலும், செல்ல முடியாமல் திரும்பிவிட்டனர் என்கிற தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் கொரோனோ நோய் குறித்தான அச்சத்தின் காரணமாகவும் மாணவர்கள் தேர்வெழுதாமல் போயிருக்ககூடும் என்கிற தகவல்களும் வெளியாகியுள்ளது.

Tags : #PUBLICEXAM