வெளிநாட்டிலிருந்து சொந்த ஊர் வந்து ... தனிமையில் இருக்காமல் சுற்றி திரிந்த நபர் ... நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்
முகப்பு > செய்திகள் > தமிழகம்வீட்டில் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்ட போதும் பொது வெளியில் கட்டிட பொறியாளர் ஒருவர் பொது இடங்களில் சுற்றித் திரிந்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் அதிக அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்தியா முழுவதும் இன்று முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த 45 வயதான கட்டிட பொறியாளர் ஒருவர் துபாயில் இருந்து சென்னை திரும்பியிருந்தார். அப்போது சென்னை விமான நிலையத்தில் அவரை பரிசோதித்த அதிகாரிகள் கொரோனா தொற்று சந்தேகத்தின் அடிப்படையில் வீட்டில் தனிமையில் இருக்க அறிவுறுத்தியிருந்தனர்.
ஆனால் வீட்டிற்கு வந்த பொறியாளர், அதிகாரிகளின் அறிவுரையை மதிக்காமல் வெளியில் சுற்றித்திரிந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி அளித்த புகாரின் பெயரில் போலீசார் கட்டிடட பொறியாளர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அதிகாரிகளின் கடும் எச்சரிக்கைகளுக்கு பின் அவர் மீண்டும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், வீட்டில் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்ட நபர் பொது இடங்களில் சுற்றித் திரிந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
