‘என் தங்கச்சி காணாமல்போய் 4 நாள் ஆச்சு’.. ‘யாராவது பாத்தா சொல்லுங்க’.. சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Mar 19, 2020 12:48 PM

செங்குன்றம் அருகே குடும்பத்தகராறில் வீட்டை விட்டு வெளியேறிய பெண்ணை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Chennai woman missing near Redhills due to family issue

சென்னை செங்குன்றம் பாடியநல்லூர் அருகே வடிவேல் நகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி அம்பிகா. இவர்கள் இருவருக்கும் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்து ஒரு குழந்தை உள்ளது. கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 16ம் தேதி காலை விஜயகுமாருக்கும், அம்பிகாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் கோபித்துக்கொண்டு அம்பிகா வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், அம்பிகா காணாமல் போனது குறித்து உறவினர்களுக்கு விஜயகுமார் தகவல் கொடுத்துள்ளார். உடனே அவர்கள் பல இடங்களில் தேடி பார்த்துள்ளனர். காலை 11.50 மணி முதல் அம்பிகாவின் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அம்பிகா காணாமல் போனது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதுகுறித்து அம்பிகாவின் சகோதரர் சரவணன் கூறுகையில், ‘என் தங்கை காணாமால்போய் இன்றுடன் நான்கு நாட்கள் ஆகிவிட்டன. கடந்த 16ம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். உங்களில் யாருக்காவது அம்பிகா பற்றி தெரியவந்தால் 6382367007 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவியுங்கள்’ என தெரிவித்துள்ளார்.

News Credits: PuthiyaThalaimurai

Tags : #POLICE #CHENNAI #WOMAN #MISSING