“1 வருட டார்ச்சர்”.. “விடுதியில் மாணவன் எடுத்த விபரீத முடிவு!”.. “11 மாணவர்கள்.. 3 ஊழியர்கள் கைது”.. நடுங்கவைக்கும் காரணம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Jan 22, 2020 04:25 PM

மகாராஷ்டிராவில் 12 -ஆம் வகுப்பு மாணவனுக்கு நேர்ந்துள்ள கொடூரச் சம்பவத்தை அடுத்து 11 மாணவர்கள் மற்றும் 3 பள்ளி ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை உண்டுபண்ணியுள்ளது.

11 students, 3 staffers arrested teen commits suicide

மகாராஷ்டிர மாநிலம் சந்திரபூரில், கடந்த ஜனவரி 18-ஆம் தேதி அன்று 12-ஆம் வகுப்பு பயின்று வந்த பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியை நடுங்க வைத்தது. மேலும் அம்மாணவனை இந்த முடிவுக்கு தூண்டியதற்காக 11 மாணவர்களும் 3 ஊழியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தான் தங்கியிருந்த விடுதியிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள, இந்த மாணவனின் மரணம் பற்றிய முதற்கட்ட விசாரணையில், தற்கொலை செய்துகொண்ட மாணவனை சக மாணவர்களும், பள்ளி நிர்வாக ஊழியர்களும் சேர்ந்து ஒரு வருடமாக பலாத்காரத்துக்கு வற்புறுத்தியதாகவும், பின்னர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பெற்றோர்களை நடுங்கவைத்துள்ளது இந்த சம்பவம். 

Tags : #SCHOOLSTUDENT #HARASSMENT #TEEN