‘செல்போனில் வீடியோ எடுத்த ரசிகரின் முகத்தில் குத்து விட்ட பிரபல கால்பந்தாட்ட வீரர்’.. பரபரப்பை கிளப்பிய வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Apr 29, 2019 05:57 PM

கால்பந்து வீரரான நெய்மர், வீடியோ எடுத்த ரசிகரின் போனை தட்டிவிட்டு முகத்தில் குத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

WATCH: Neymar punching fan after PSG loses French cup final to Rennes

பிரெஞ்சு கோப்பை கிளப் கால்பந்து தொடரின் இறுதி போட்டி நேற்று பிரான்ஸில் நடைபெற்றது. இதில் பி.எஸ்.ஜி அணியும், ரேன்னஸ் அணியும் மோதின. போட்டியின் பாதி நேர முடிவில் பி.எஸ்.ஜி அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

இதனை அடுத்து நடந்த இரண்டாவது பாதி நேர ஆட்டமுடிவில் ரேன்னஸ் அணியும் 2 கோல்கல் போட்டது. இதனால் ஆட்டத்தின் இறுதி பரபரப்பாக காணப்பட்டது. இரு அணிகளும் ஒரே கோல் கணக்கில் இருந்ததால் பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது.

இதில் ரேன்னஸ் அணி 6-5 என்ற கோல் கணக்கில் வென்று கோப்பையைக் கைப்பற்றியது. இதனை அடுத்து தோல்வியடைந்த விரக்தியில் பி.எஸ்.ஜி வீரர்கள் அறைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது ரசிகர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். இதனால் கோபமான பி.எஸ்.ஜி அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான நெய்மர் ரசிகரின் செல்போனை தட்டிவிட்டு அவரின் முகத்தில் குத்திவிட்டு சென்றார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.

Tags : #FOOTBALL #NEYMAR #PSG #VIRALVIDEO