‘பயிற்சியில் பலத்த காயமடைந்த பிரபல வீரர்’.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Apr 18, 2019 04:32 PM

கொல்கத்தா அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான ரஸல் வலை பயிற்சியில் ஈடுப்பட்ட போது காயம் அடைந்தது அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

WATCH: KKR face Andre Russell injury scare before RCB match

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி அடுத்து பெங்களூரு அணிக்கு எதிராக விளையாட உள்ளது. இதற்காக கொல்கத்தா வீரர்கல் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதில் கொல்கத்தா அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஆண்ரே ரஸல் வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது போடப்பட்ட பவுன்சர் பந்தை கணிக்காமல் ஆட முயற்சித்தபோது அவரின் கழுத்தை தீவிரமாக தாக்கியது., அப்போது அணியின் பிசியோதெரபி மருத்துவர் உடனடியாக ரஸலுக்கு முதலுதவி கொடுத்துவிட்டு, மருத்துவமனைக்கு ஸ்கேன் எடுக்க அழைத்து செல்லப்பட்டார்.

இதுவரை கொல்கத்தா அணி விளையாடிய 7 போட்டிகளில் ரஸல் 312 ரன்கள் எடுத்துள்ளார். கடந்த முறை கொல்கத்தா அணி பெங்களூரு அணியை சந்தித்த போது, 206 என்ற இமாலய இலக்கை எட்ட ரஸல் உதவினார். அந்த போட்டியில், 13 பந்துகளில் 48 ரன்கள் அடித்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ரஸலுக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

Tags : #IPL2019 #IPL #KKRHAITAIYAAR #VIRALVIDEO #RUSSELL