உண்மையாவே பட்டதா?.. நம்பி கேட்கலாமா?.. ‘0’ செகண்ட்டில் கேட்ட ரிவ்யூ.. வைரலாகும் ‘தல’யின் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Apr 11, 2019 09:44 PM

ரஹனேவை சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சர்துல் தாகூர் விக்கெட் எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

WATCH: MS Dhoni convinced by Deepak Chahar to take DRS

ஐபிஎல் டி20 லீக்கின் 25 -வது போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இன்று(11.04.2019) நடைபெறுகிறது. இப்போட்டியில் ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மற்றும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 5 போட்டிகளை வென்று 10 புள்ளிகளுடன் சென்னை அணி முதல் இடத்தில் உள்ளது.

இந்லையில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்ய ராஜஸ்தான் அணியின் தொடக்கவீரர்களாக ரஹானே மற்றும் பட்லர் களமிறங்கினர். அப்போது ரஹானே 14 ரன்கள் எடுத்திருந்த போது சர்துல் தாகூர் வீசிய பந்தில் LBW -வில் அவுட்டானார்.

ஆனால் முதலில் நடுவர் அவுட் கொடுக்காததால் மூன்றாவது நடுவரிடம் கேட்குமாறு தாகூர் கேப்டன் தோனியிடன் கூறினார். இதனை அடுத்து தோனி DRS முறைப்படி ரிவ்யூ கேட்டார். முடிவில் இதனை அவுட் என நடுவர்கள் அறிவித்தனர்.

Tags : #IPL #IPL2019 #CSKVSRR #MSDHONI #YELLOVE #WHISTLEPODU #VIRALVIDEO