‘அப்டி என்னதான்ப்பா பண்ணாரு அவரு’.. ‘அஸ்வினை கேலி செய்து கடுப்பேற்றிய தவான்’.. மீண்டும் வெடித்த மான்கட் சர்ச்சை!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Apr 21, 2019 12:28 AM

பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வினைப் பார்த்து டெல்லி அணி வீரர் ஷிகர் தவான் கேலி செய்யும் விதமாக நடனமாடும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

WATCH: Ashwin try to mankad but Dhawan mocks him for that

ஐபிஎல் டி20 லீக்கின் 37 -வது போட்டி இன்று(20.04.2019) டெல்லியில் நடைபெற்றது. இதில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் மற்றும் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து பேட்டிங் செய்த பஞ்சாப் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக கிறிஸ் கெய்ல் 69 ரன்கள் எடுத்தார்.

இதனைத் தொடர்ந்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணி 19.4 ஓவர்களின் முடிவில் 166 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 56 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 58  ரன்களும் எடுத்தனர்.

இப்போட்டியின் 13 -வது ஓவரை அஸ்வின் வீசினார். அப்போது அந்த ஓவரின் 3 -வது பந்தை வீச வந்து பாதியிலேயே திரும்பிச் சென்றார். உடனே அதை கேலி செய்யும் விதமாக தவான் நடனமாடினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதோடு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #IPL #IPL2019 #ASHWIN #DHAWAN #DCVKXIP #MANKAD #VIRALVIDEO