‘சாரி பாஸ் தெரியாம அடிச்சிட்டேன்’.. என்னது சாரியா?.. வைரலாகும் ரஸலின் வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Apr 13, 2019 12:01 AM
ஷிகர் தவானின் அதிரடி ஆட்டத்தால் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது

ஐபிஎல் டி20 லீக்கின் 26 -வது போட்டி இன்று(12.04.2019) கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பௌலிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் வித்தியாசத்தில் 178 ரன்கள் எடுத்து. இதில் தொடக்க வீரரான சுப்மன் ஹில் 65 ரன்கள் எடுத்து அசத்தினார். வழக்கம் போல இப்போட்டியிலும் ரஸல் அதிரடியாக விளையாடி 21 பந்துகளுக்கு 45 ரன்கள் அடித்து அசத்தினார்.
இதனைத் தொடர்ந்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி விளையாடியது. 18.5 ஓவர்களின் முடிவில் 180 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. இதில் ஷிகர் தவான் அதிகபட்சமாக 97 ரன்கள் அடித்து அசத்தினார்.
இப்போட்டியின் முதல் இன்னிங்ஸ்ஸில் கொல்கத்தா வீரர் ரசல் அடுத்த பந்து எதிர்முனையில் இருந்த அந்த அணியின் மற்றொரு வீரரான ப்ராத்வொய்ட்டின் தொடையில் பலமாக அடித்தது.
https://t.co/yRawl0KQ3K russell and brathwaite 😁
— Thalapathy Love (@Guruselva33) April 12, 2019
