‘குழப்பத்தின் உச்சத்துல இருந்தா’ இப்படியும் நடக்கும்.. பயணியின் தரமான சம்பவம்!

முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்

By Siva Sankar | Apr 12, 2019 01:58 PM

பரபரப்பான சூழலில் ஏர்போர்ட்டிற்கு வந்தடைந்த பயணி ஒருவர் குழப்பத்தில் எக்ஸ்ரே ஸ்கேனரில் கைப்பையுடன் சேர்ந்து தானும் ஏறி, இன்னொரு புறமாக வெளிவந்துள்ள சம்பவம் வீடியோவாக இணையத்தில் வைரலாகி வருகிறது.

traveller gets into XRay Scanner with his bag goes viral

கடந்த வருடம் சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஷாங்டோன் மாகாணத்திற்குட்பட்ட  டாமிங்கு ரயில்வே நிலையத்தில் பெற்றோருடன் வந்த சிறுமி ஒருவர் ஸ்கேன் செய்யும் இந்த கன்வேயரில் ஒரு புறம் ஏறி மறுபுறம் வெளிவந்த வீடியோ அனைவருக்கும் பரவியது.

இதே போல் இம்முறை ரஷ்யாவின் ஏர்போர்ட்டிற்கு வந்த பயணி ஒருவர் முதலில் தன்னை பரிசோதிக்கும் மெட்டல் டிடக்டர் ஃபிரேமை தாண்டி வருகிறார். உடனே அடுத்து இருக்கும் ஸ்கேன் செய்யும் மெஷினுக்குள்ளேயும் குழப்பமான நிலையுடன் சற்றும் தாமதிக்காமல் யோசிக்காமலும் கைப்பையுடன் உள் நுழைகிறார். அவர் மறுபுறம் வெளிவரும் வரை அவரை யாரும் கவனிக்கவில்லை.

மெட்டல் டிடக்டருக்குள் நுழைவது போலவே, ஸ்கேன் மெஷினுக்குள்ளும் நுழையும் இந்த பயணியின் விநோதமான இந்த செயலை  மானிட்டர் செய்யும் நபர்களும் இதை மிகத் தாமதமாகவே கவனித்திருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags : #VIRALVIDEO #XRAY #SCANNER #CHECK #AIRPORT