‘இப்டியா ஒரு மனுஷன கலாய்க்கிறது’.. ‘சென்னை அணி வீரரை வித்தியாசமாக கிண்டல் செய்த ரோஹித்’.. வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Apr 26, 2019 10:53 PM
மும்பை இந்தியன்ஸ் அணியிடம் சென்னை அணி படுதோல்வி அடைந்துள்ளது.

ஐபிஎல் டி20 லீக்கின் 44 -வது போட்டி இன்று(26.04.2019) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
இதில் சென்னை அணியின் கேப்டன் தோனி விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு உடல்நிலை சரியில்லாததால் இப்போட்டியில் விளையாடவில்லை. அதனால் மீண்டும் சுரேஷ் ரெய்னா தலைமையில் சென்னை அணி விளையாடியது.
இதில் டாஸ் சென்னை அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக மும்பை அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா 67 ரன்கள் எடுத்தார்.
இதனைத் தொடர்ந்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணி 17.4 ஓவர்களின் முடிவில் 109 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து மும்பை அணியிடம் மீண்டும் படுதோல்வி அடைந்தது. இதில் இந்த ஐபிஎல் தொடரில் முதல் முறையாக களமிறங்கிய முரளி விஜய் அதிகபட்சமாக 38 ரன்கள் எடுத்து ஆறுதல் அளித்தார்.
இதில் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர் மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் கேதர் ஜாதவை கலாய்த்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
— KhurShah (@ShahKhur) April 26, 2019
