கையில குழந்தையோட வந்து.. கண்ணீரோட நிமிந்து பாக்குறாங்க.. உணர்ச்சிகரமான கமலின் புதிய வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Selvakumar | Apr 16, 2019 08:49 PM
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் புதிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18-ம் தேதி மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. பிரச்சராத்துக்கு இன்றே கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளின் தேர்தல் பரப்புரை உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில், சமூக ஊடகங்கள் மூலம் தனது தேர்தல் பரப்புரையை முன்னெடுத்து வரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமல்ஹாசன் மீண்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஜல்லிக்கட்டுக்கு போராடுனோம், டிமாணிடேஷனுக்காக, ஜிஎஸ்டி -க்காக, மீத்தேன், கூடங்குளம், நியூட்டினோ, விவசாயிகள் தற்கொலை, பொள்ளாச்சி கற்பழிப்பு இப்டி போராடி போராடியே சாவுரத்துக்கு நாம என்ன சாக்கடையில் வாழ்கிற புழுவா? இவங்கள மாதிரி, போராட்டம் தான் இந்த மக்களின் வாழ்க்கை என இந்த மக்களின் தலையில் விதியா எழுத்தீட்டாங்களா? இந்த கனவான்கள். ஒரு தலைவனை தேர்ந்தெடுக்க நாம ஏன் போராட்ட மாட்டிக்கோம். நம்ம விவசாயிகள் ரத்ததை அட்டையாக உறுஞ்சும் இந்த அரசியல்வாதிகளை தடுக்க எப்படி மறந்தோம்.
இந்த கோவத்தை எல்லாம் வெளிய கொண்டுவந்து கேள்வியா கேட்கலாம்னா, நீ யாருடா அதெல்லாம் கேக்றதுக்கு, நீ நடிகன் களத்துல இறங்கிப் பார் அப்ப புரியும்னு சொன்னாங்க. சரி சொல்றாங்களேனு நான் உசுரா நெனச்ச என் தொழில விட்டுட்டு இங்க வந்தா ஏன்டா வந்தனு சொல்றாங்க. என்ன தான்டா பிராபலம் உங்களுக்கெல்லாம், இத நான் கேக்குறேன் ‘ஊழல் உரிமை பறி போய்விடும் என்ற கவலையா, இல்லை உங்க அடிமை ஆட்சி பறி போய்விடும் என்ற பயமா’ என இது போன்று கமல்ஹாசன் உணர்ச்சிபூர்வமாக பேசியுள்ளார்.
