‘தல’யின் ஹெலிகாப்டர் சிக்ஸ் போல, தினேஷ் கார்த்தி அடித்த ‘நடராஜர்’ சிக்ஸ்.. வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Apr 25, 2019 09:43 PM
தினேஷ் கார்த்திக் அடித்த நடராஜர் ஸ்டைல் சிக்ஸ் இணையத்தை கலக்கி வருகிறது.

ஐபிஎல் டி20 தொடரின் இன்றைய(25.04.2019) போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல் அணிகள் மோதுகின்றன.
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டகாரர்களான க்றிஸ் லின் மற்றும் சுபமன் கில் அடுதடுத்து அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர். இதனை அடுத்து நிதிஷ் ரானா மற்றும் கேப்டன் தினேஷ் கார்த்திக் கூட்டணி ஜோடி சேர்ந்து ஆடியது. ஆனால் நிதிஷ் ரானா 21 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். இதனை அடுத்து வந்த ரஸல் மற்றும் தினேஷ் கார்த்திக் கூட்டணி நிதானமாக விளையாடி வருகிறது. இதில் தினேஷ் கார்த்திக் அடுத்த நடராஜர் ஸ்டைல் சிக்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
WATCH: DK's Nataraja Six
— IndianPremierLeague (@IPL) April 25, 2019
Full video here 📹📹https://t.co/PKHz3t2kAt #KKRvRR
