‘இவ்வளவு ரணகளத்திலயும் ஒரு கிளுகிளுப்பு நடந்திருக்கு’.. தோனியும், ஜடேஜாவும் செய்த செயல்.. வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Apr 12, 2019 02:21 AM
ஜடேஜா அடித்த புதுவிதமான சிக்ஸர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் டி20 லீக்கின் 25 -வது போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நேற்று(11.04.2019) நடைபெற்றது. இப்போட்டியில் ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மற்றும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 5 போட்டிகளை வென்று 10 புள்ளிகளுடன் சென்னை அணி முதல் இடத்தில் உள்ளது.
இந்நிலையில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்ய ராஜஸ்தான் அணியின் தொடக்கவீரர்களாக ரஹானே மற்றும் பட்லர் களமிறங்கினர். இதில் ரஹானே 14 ரன்களிலும், பட்லர் 23 ரன்களிலும் அடுத்தடுத்து அவுட்டாகினர். இதனை அடுத்து வந்த வீரர்களும் தொடர்ந்து அவுட்டாக 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு ராஜஸ்தான் அணி 151 ரன்களை எடுத்தது.
இதனைத் தொடர்ந்து 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி விளையாடி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய வாட்சனும், டு பிளிஸிஸும் அடுத்தடுத்து அவுட்டாக, அடுத்த வந்த ரெய்னாவும் 4 ரன்களில் எதிர்பாராத ரன் அவுட்டில் வெளியேறினார். இதனை அடுத்து ஜோடி சேர்ந்த தோனி மற்றும் அம்பட்டி ராயுடுவின் கூட்டணி அதிரடியாக விளையாட ஆரம்பித்தனர். இதில் ராயுடு 57 ரன்களும், தோனி 58 ரன்களும் எடுத்தனர். 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது.
பரபரப்பாக நடந்த கடைசி ஓவரின் முதல் பந்தை ஜடேஜா அடித்த போது தடுமாறி கீழே விழுந்தார். ஆனால் பந்து சிக்ஸருக்கு சென்றது. அப்போது தோனி விளையாடும் விதமாக ஜடேஜாவின் தலையில் மெதுவாக பேட்டால் அடிப்பார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Match se best toh ye tha xd #RRvCSK #Dhoni #IPL2019 #CSK #CSKvsRR pic.twitter.com/hoeUF0NB7J
— CreaticEdit (@CreaticEdit) April 11, 2019
