'பசித்த வயிறு, பணமில்லா வாழ்க்கை'... கோமதிக்கு பிரபல 'சி.எஸ்.கே.' வீரர் பாராட்டு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Apr 29, 2019 05:55 PM
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு சி.எஸ்.கே. அணி வீரர் ஹர்பஜன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவிற்காக ஓடிய தமிழகத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து முதலாவதாக வந்து தங்கப் பதக்கம் வென்றார்.
ஏழ்மை நிலையில் கிழிந்த ஷூவுடன் ஓடி தடகள போட்டியில் சாதனை புரிந்தார் தங்க மங்கை கோமதி மாரிமுத்து. பேருந்துகூட இல்லாத ஊரில் இருந்து வந்து, பல சோகங்களை தாண்டி இந்த சாதனையை கோமதி மாரிமுத்து புரிந்துள்ளார்.
தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமைச் சேர்ந்த கோமதி மாரிமுத்துவுக்கு அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைத்து தரப்பினரும் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். நேரிலும், சமூக வலைத்தளங்களிலும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், சி.எஸ்.கே. அணி வீரர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் கோமதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில், ‘பசித்த வயிறு. பணமில்லா வாழ்க்கை. உதவ ஒருவரும் இல்லை. ஆனால் இந்தப் பெண்ணின் வெற்றி கதை நமக்கு ஒரு பாடம். நம்பிக்கை வெற்றியோடு வரும் ஆனால் வெற்றி நம்பிக்கை உள்ளவர்களிடம் மட்டுமே வரும் என்பதற்கு #GomathiMarimuthu ஒரு சாட்சி. Hats-off #Gomathi you are such an Inspiration to the Nation’ என்று பதிவிட்டுள்ளார்.
பசித்த வயிறு.பணமில்லா வாழ்க்கை.உதவ ஒருவரும் இல்லை.ஆனால் இந்த பெண்ணின் வெற்றி கதை நமக்கு ஒரு பாடம்.நம்பிக்கை வெற்றியோடு வரும் ஆனால் வெற்றி நம்பிக்கை உள்ளவர்களிடம் மட்டுமே வரும் என்பதற்கு #GomathiMarimuthu ஒரு சாட்சி..Hats-off #Gomathi you are such an Inspiration to the Nation pic.twitter.com/nKonTRZHm6
— Harbhajan Turbanator (@harbhajan_singh) April 28, 2019
