‘இனி ஏடிஎம் போனா ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும் போல’.. பணம் எடுக்கும் போது படமெடுத்த பாம்பு.. பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Apr 24, 2019 05:43 PM

ஏடிஎம் இயந்திரத்தில் பாம்பு இருந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

WATCH: Snake found inside an ATM near Thaneerpandal Road in Coimbatore

கோவை பீளமேடு அடுத்த தண்ணீர் பந்தல் சாலை அருகே தனியார் வங்கி ஏடிஎம் ஒன்று அமைந்துள்ளது. வழக்கமாக மக்கள் பணம் இந்த ஏடிஎம் எடுக்க வருவதும் போவதுமாக இருந்துள்ளனர். அப்போது ஏடிஎம் இயந்திரத்தின் அருகே பாம்பு ஒன்று இருப்பதை வாடிக்கையாளர் ஒருவர் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதனை அடுத்து அருகில் இருந்தவர்களிடம் இதனை தெரிவித்து, பாம்பை வெளியே துறத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஆனால் பாம்பு ஏடிஎம் இயந்திரத்துக்குள் நுழைந்துவிட்டதால் அவர்களுக்கு பாம்பைத் துறத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தகவலறிந்து வந்த காவல் துறையினர், உடனடியாக அப்பகுதியில் இருக்கும் பாம்பு பிடிக்கும் வீரரை வரவழைத்து, நீண்ட போரட்டத்துக்கு பின்னர் ஏடிஎம் இயத்திரத்தில் இருந்த பாம்பை பிடித்துள்ளனர். ஏடிஎம் இயந்திரத்தில் பாம்பு இருந்த செய்தி அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Tags : #SNAKE #ATM #BIZARRE #VIRALVIDEO