‘இப்டி அவுட் ஆவோம்னு அவரே எதிர் பார்த்திருக்க மாட்டாரு போல’.. வைரலாகும் ரெய்னாவின் வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Apr 11, 2019 11:54 PM
எதிர்பாராத நேரத்தில் ரன் அவுட்டாகி வெளியேறிய ரெய்னாவின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் டி20 லீக்கின் 25 -வது போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இன்று(11.04.2019) நடைபெறுகிறது. இப்போட்டியில் ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மற்றும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 5 போட்டிகளை வென்று 10 புள்ளிகளுடன் சென்னை அணி முதல் இடத்தில் உள்ளது.
இந்லையில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்ய ராஜஸ்தான் அணியின் தொடக்கவீரர்களாக ரஹானே மற்றும் பட்லர் களமிறங்கினர். இதில் ரஹானே 14 ரன்களிலும், பட்லர் 23 ரன்களிலும் அடுத்தடுத்து அவுட்டாகினர். இதனை அடுத்து வந்த வீரர்களும் தொடர்ந்து அவுட்டாக 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு ராஜஸ்தான் அணி 151 ரன்களை எடுத்தது.
இதனைத் தொடர்ந்து 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி விளையாடி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய வாட்சனும், டு பிளிஸிஸும் அடுத்தடுத்து அவுட்டாக, அடுத்த வந்த ரெய்னாவும் 4 ரன்களில் எதிர்பாராத ரன் அவுட்டில் வெளியேறினார்.
WATCH: @craig_arch hits the Bullseye 😮😮
— IndianPremierLeague (@IPL) April 11, 2019
Full video 📹📹https://t.co/VC8KCmJaVy #RRvCSK
