‘இதோட 9 தடவ இப்டி நடக்குது’.. சைகை செய்து கலாய்த்து கொண்ட விராட் கோலி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Apr 28, 2019 05:39 PM

டாஸ் தோல்வியடைந்த பின்னர் பெங்களூரு கேப்டன் விராட் கோலி சைகையில் செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

WATCH: Kohli trolls himself after losing toss for the 9th time

ஐபிஎல் டி20 லீக்கின் இன்றைய போட்டி டெல்லியில் உள்ள ஃபெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டெல்லி கேப்பிடஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

இரு அணிகளுக்கு இடையேய பெங்களூரில் நடந்த முந்தைய போட்டியில் டெல்லி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தியது. இதனை அடுத்து தொடர்ந்து 6 போட்டிகளில் தோல்விடைந்த பெங்களூரு அணி, அடுத்து விளையாடிய 5 போட்டிகளில் 4 -ல் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இப்போட்டியில் டெல்லி அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இதன்மூலம் 9 முறை டாஸ் தோல்வி அடைந்ததாக விராட் கோலி சைகையில் காட்டினார். இதனை அடுத்து பேட்டிங் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 50 ரன்களும், ஸ்ரேயாஷ் ஐயர் 52 ரன்களும் எடுத்தனர். இதனைத் தொடர்ந்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி விளையாடி வருகிறது.

Tags : #IPL #IPL2019 #VIRATKOHLI #VIVOIPL2019 #DCVRCB #PLAYBOLD #VIRALVIDEO