எதுக்கு ரோஹித் இப்டி பண்ணாரு?.. பரபரப்பான போட்டியில் அம்பயர் எடுத்த முடிவு.. சர்ச்சையை கிளப்பிய வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Apr 28, 2019 11:41 PM

மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா அவுட்டான பின்பு பேட்டால் ஸ்டெம்பில் அடித்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

WATCH: Rohit Sharma lost his cool after being given out LBW

ஐபிஎல் டி20 லீக்கின் 47 -வது போட்டி இன்று(28.04.2019) கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா அணி நிர்ணயிக்கபட்ட 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 232 ரன்கள் எடுத்தது. இதில் தொடக்க ஆட்டகாரர்களாக களமிறங்கிய சுபமன் கில் மற்றும் கிறிஸ் லின் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆட ஆரம்பித்தனர். இதில் சுபமன் கில் 76 ரன்களும், கிறிஸ் லின் 54 ரன்களும் எடுத்தனர்.

இதனை அடுத்து களமிறங்கிய ரஸல் ஆரம்பத்தில் நிதானமான ஆட்டத்தை கடைபிடித்தார். பின்னர் கடைசியில் தினேஷ் கார்த்திக் உடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆடி 40 பந்துகளில் 80 ரன்கள் விளாசினார்.

இதனைத் தொடர்ந்து 233 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் மும்பை அணி விளையாடி வருகிறது. இதில் தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக் மற்றும் ரோஹித் ஷர்மா களமிறங்கினர். டி காக் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகினார். இதனை அடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக விளையாடி 34 பந்துகளில் 91 ரன்கள் விளாசினார். ஆனாலும் 20 ஓவர்களின் முடிவில் 198 ரன்கள் எடுத்து 34 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி தோல்வியைத் தழுவியது.

இப்போட்டியில் 12 ரன்கள் எடுத்திருந்த போது மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா எல்.பி.டபுல்.யூவில் அவுட்டானார். இதனால் கோபமாக பேட்டால் ஸ்டெம்பை தட்டிவிட்டி சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #IPL #IPL2019 #KKRVMI #KKRHAITAIYAAR #ONEFAMILY #ROHITSHARMA #VIRALVIDEO