'சகோதரன்' என்றால் என்னத் தெரியுமா? 'சகோதரி'யை கிண்டல் செய்யும் ராகுல்.. வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Apr 27, 2019 07:23 PM

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் விமான நிலையத்தில், சகோதரி பிரியங்கா காந்தியை, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கிண்டல் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

Rahul Gandhi explains what it means to be a good brother

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தியும் அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் மக்களவைத் தேர்தலை ஒட்டி, கடந்த சில வாரங்களாக இந்தியா முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகின்றனர். உத்தரப்பிரதேசத்தில் வெவ்வேறு இடங்களில் ராகுல்காந்தியும், அவரது சகோதரி பிரியங்கா காந்தியும், பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்.

இந்தநிலையில்  பிரச்சாரம் செய்ய கான்பூர் விமானநிலையத்துக்கு ராகுல் காந்தி வந்தார். அப்போது அடுத்த தேர்தல் பரப்புரைக்கு செல்ல பிரியங்கா காந்தியும் வந்திருந்தார். இதனால் எதிர்பாராவிதமாக சந்தித்துக்கொண்ட இருவரும், நடத்திய உரையாடல் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதில் ராகுல்காந்தி, 'ஒரு நல்ல சகோதரன் என்றால் என்னத் தெரியுமா? தான் நீண்ட தூரம் பிரச்சாரம் செய்ய சென்றாலும், சிறிய வகை ஹெலிகாப்டரை மட்டுமே பயன்படுத்துவதாகவும், ஆனால் தனது சகோதரி பிரியங்கா காந்தி அருகில் உள்ள தூரத்திற்கு செல்வதாக இருந்தாலும் பெரிய வகை ஹெலிகாப்டரை பயன்படுத்துவதாகவும் கிண்டலுடன் கூறினார்'.

இதனையடுத்து பிரியங்கா காந்தி, ராகுலை பொய் சொல்வதாகக் கூறி செல்லமாக தள்ளிவிட்டார். அதற்கு ராகுல்காந்தி 'ஆனாலும் அவரை எனக்கு பிடிக்கும்' என்று கூறினார். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களிலும், இணையதளங்களிலும் வைரலாகி வருகிறது.

Tags : #RAGULGANDHI #VIRALVIDEO