‘க்ளீன் போல்ட்’..‘ஆனா அவுட் இல்லை’.. வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Apr 17, 2019 12:41 AM
ராஜஸ்தனை வீழ்த்தி பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றுள்ளது

ஐபிஎல் தொடரின் 32-வது லீக் ஆட்டம் மொகாலியில் நேற்று(16.04.2019) நடைபெற்றது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 182 ரன்கள் எடுத்து. இதில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 52 ரன்களும், டேவிட் மில்லர் 40 ரன்களும், கிறிஸ் கெய்ல் 30 ரன்கள் எடுத்தனர். இதில் மில்லர் 32 ரன்கள் எடுத்திருந்த போது ஆர்சர் வீசிய பந்தில் அவுட்டானார். ஆனால் ஆச்ரசின் கால் க்ரீஸை தாண்டி இருந்ததால் நடுவர் அதனை நோ பால் என அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. இதில் ராகுல் திருப்பதி 50 ரன்கள் எடுத்ததன் மூலம் இந்த ஐபிஎல் சீசனின் முதல் அரை சதத்தைப் பதிவு செதுள்ளார்.
https://t.co/2fThpuLeYR Clean bowled, but not out
— Thalapathy Love (@Guruselva33) April 16, 2019
