‘போர் தொழிலுக்கு பலகணும் குழந்தை’.. நம்ம‘தல’ கிட்டயேவா.. வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Apr 14, 2019 08:30 PM
சுரேஷ் ரெய்னா மற்றும் ஜடேஜாவின் அதிரடியால் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.

ஐபிஎல் டி20 லீக்கின் 29 -வது போட்டி இன்று(14.04.2019) கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதின.
இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் கொல்கத்தா அணி பேட்டிங் செய்தது. இதில் தொடக்க ஆட்டக்கார்களாக க்றிஸ் லின் மற்றும் சுனில் நரேன் களமிறங்கினர். இதில் சுனில் நரேன் 2 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். இதனை அடுத்து ஜோடி சேர்ந்த நிதிஷ் ராணா மற்றும் க்றிஸ் லின் கூட்டணி நிதானமாக விளையாட ஆரம்பித்தது. 20 ஓவர்களின் முடிவில் கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்துள்ளது. இதில் அதிகபட்மாக க்றிஸ் லின் 82 ரன்கள் அடுத்துள்ளார். இதன் கடைசி ஓவரின் கடைசி பந்தில் ரன் எடுக்க முயன்ற கொல்கத்தா வீரர் குல்தீப் யாதவை, தோனி மற்றும் சர்துல் தாகூர் ரன் அவுட் செய்து வெளியேற்றினர்.
இதனைத் தொடர்ந்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி விளையாடியது. 19.4 ஓவர்களின் முடிவில் 162 ரன்கள் எடுத்து சென்னை அணி வெற்றி பெற்றது. இதில் சுரெஷ் ரெய்னா 58 ரன்களும், ஜடேஜா 31 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
— Thalapathy Love (@Guruselva33) April 14, 2019
