சென்னை சேப்பாக்கத்தை அடுத்து பிரமாண்ட கிரிக்கெட் மைதானம் ரெடி.. செம குஷியில் ரசிகர்கள்..! எங்க தெரியுமா..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தை அடுத்து பிரமாண்ட கிரிக்கெட் மைதானம் சேலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் வழிகாட்டுதலின் பெயரில், சேலம் கிரிக்கெட் ஃபவுண்டேஷன் சார்பில் இந்த மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானம் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுகு நல்ல வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
இந்த கிரிக்கெட் மைதானம் சென்னை-சேலம் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள வாழப்பாடியை அடுத்த காட்டுவேப்பில்லைப்பட்டியில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 16 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த மைதானத்தில் 5 பிட்சுகள் உள்ளன. 14 வயதுக்குட்பட்ட மாநில அணிக்கு வீரர்களை தேர்வு செய்வதற்கான பயிற்சி போட்டியும் இங்கு நடத்தப்பட உள்ளது.
தற்போது மைதானத்தை சுற்றிலும் பார்வையாளர்கள் கேலரி அமைக்கப்பட்டு வருவதாக சேலம் கிரிக்கெட் ஃபவுண்டேஷன் அமைப்பின் தலைவர் ராமசாமி தெரிவித்துள்ளார். விரைவில் ஐபிஎல், டிஎன்பிஎல் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் இங்கு நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
News Credits: News18Tamil
