சத்தமே இல்லாம ‘இறுதிப்போட்டிக்கு’ நுழைந்த அணி.. U19 உலகக்கோப்பையில இந்தியா யாரோட மோதப்போறாங்க தெரியுமா..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுU19 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் நியூஸிலாந்தை வீழ்த்தி வங்கதேச அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் U19 உலகக்கோப்பை தொடரின் 2-வது அரையிறுதி சுற்றில் நியூஸிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி நியூஸிலாந்து அணி பேட்டிங் செய்தது. இதில் 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 211 ரன்களை நியூஸிலாந்து அணி எடுத்தது.
இதனை அடுத்து பேட்டிங் செய்த வங்கதேச அணி 44.1 ஓவர்களில் 215 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் வங்கதேச அணி U19 உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு நுழைந்துள்ளது. ஏற்கனவே இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதால், வரும் ஞாயிற்றுக்கிழமை (09.02.2020) இரு அணிகளும் பலபரீட்ச்சை நடத்த உள்ளன.
