#WATCH #VIDEO: ‘என்னா த்ரோ’... ‘ஓடிவந்து ஒரே அடிதான்’... ‘செம ரன் அவுட் செய்த ஜடேஜா’... ‘தோனி, கபில் தேவ் சாதனை தகர்ப்பு’!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Feb 08, 2020 06:50 PM

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஜடேஜா அபாரமான ஒரு ரன் அவுட்டை செய்தார். மேலும் ஒரு புதிய சாதனை படைத்துள்ளார்.

Ravindra Jadeja\'s Rocket Throw Wicket to Jimmy Neesham

இந்தியா – நியூசிலாந்து இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி ஆக்லாந்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவரில் 273 ரன்கள் அடித்தது. முதலில் வலுவான பேட்டிங்கில் இருந்த நியூசிலாந்து அணி தேவையில்லாமல் 2 விக்கெட்டுகளை அடுத்தடுத்து பறிகொடுத்தது.

நியசிலாந்து அணியில் டெய்லரும், ஜிம்மி நீஷமும் ஆடிக்கொண்டிருந்தபோது, டெய்லர் ஸ்ட்ரோக் ஒன்று வைத்தார். அப்போது ரன் எடுக்க டெய்லர் தயங்கியபோது, அதற்கு நீஷம் ஒரு ரன் ஓடலாம் என ஓடிவந்தார். ஆனால் பேக்வார்டு பாயிண்ட்டில் ஃபீல்டிங் செய்த ஜடேஜா, வேகமாக ஓடிவந்து பந்தை பிடித்து ராகெட் வீசுவது போன்று கரெக்ட்டாக ஸ்டம்ப்பில் அடித்தார். இதையடுத்து நீஷம் ரன் அவுட்டானார். வெறும் 3 ரன்களில் நீஷம் தனது விக்கெட்டை ஜடேஜாவிடம் பறிகொடுத்தார்.

மேலும், இந்திய அணி பேட்டிங் செய்தபோது, அடுத்தடுத்து வீரர்கள் சொற்ப ரன்களில் அட்டமிழக்க, 7-வது இடத்தில் களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா, அருமையாக ஆடி, அரைசதம் அடித்து கடைசி வரை போட்டியை வெல்லும் முனைப்பில் ஆடி வந்தார். அவர் போராட்டம் இந்தப் போட்டியில் வீணானாலும், முன்னாள் கேப்டன்கள் கபில் தேவ் மற்றும் தோனி ஆகிய இருவரும் 7-வது பேட்டிங் ஆர்டரில் 6 அரைசதங்கள் அடித்தநிலையில், அவர்கள் இருவரின் சாதனையையும் முறியடித்து ஜடேஜா 7 அரை சதங்கள் அடித்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.