‘உங்க சவாலை ஏத்துக்குறேன்’... ‘ஒரே ஒரு ஓவர் விளையாடப் போகும் சச்சின்’... ‘கொண்டாட்டத்தில் ரசிகர்கள்’... எங்கே தெரியுமா?!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Feb 08, 2020 03:55 PM

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றுவிட்ட சச்சின் டெண்டுல்கர், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை எல்லிஸ் பெர்ரியின் சவாலை ஏற்று, ஒரே ஒரு ஓவர் மட்டுமே ஆட உள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Sachin Tendulkar to play in only one over in Australia

ஆஸ்திரேலிய காட்டுத் தீ பாதிப்புகளுக்கு நிதி திரட்டுவதற்காக, மெல்போர்னில் நாளை காட்சி கிரிக்கெட் போட்டி ஒன்று நடைபெறுகிறது. இதில் ரிக்கி பாண்டிங் தலைமையிலான அணிக்கு பயிற்சியாளராக சச்சின் தெண்டுல்கர் உள்ளார். இந்நிலையில், இந்தப் போட்டிக்கு நடுவே, தனது பந்து வீச்சில், சச்சின் ஒரே ஒரு ஓவரை எதிர்கொள்ள தயாரா என்று ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் எல்லிஸ் பெர்ரி டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

இதற்கு உடனடியாக பதிலளித்த சச்சின், இந்த சவாலை ஏற்றுக்கொண்டுள்ளார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றுள்ள சச்சின், தோள்பட்டை காயம் காரணமாக பேட்டிங்கில் ஈடுபடக் கூடாது என அவரது மருத்துவர்கள் கூறியுள்ளனர். இருந்தபோதிலும், போட்டியின் இடைவெளிக்கு இடையே ஒரே ஒரு ஓவர் மட்டும் பேட்டிங் செய்ய தயார் என பதிவிட்டுள்ளார். இதனால் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய நிதி கிடைக்கும் என்று நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய வீராங்கனையின் விருப்பத்திற்காக விளையாட ஒப்புக்கொண்டுள்ள சச்சினை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதன்படி, ஆஸ்திரேலிய காட்டுத்தீ நிவாரண நிதிப் போட்டியில் இடைவேளையின்போது, ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை எல்லிஸ் பெர்ரியின் ஒரு ஓவரை சச்சின் டெண்டுல்கர் எதிர்கொள்வார் எனத் தெரிகிறது. அப்போது ஆஸ்திரேலிய வீராங்கனைகள் 10 பேர் களத்தில் பீல்டிங்கில் ஈடுபடவுள்ளனர்.

Tags : #CRICKET #SACHIN TENDULKAR #AUSTRALIA