என்னதான் ‘ஆள்’ இல்லன்னாலும் ‘அதுக்குனு’ இப்படியா?... வீரர்கள் ‘பற்றாக்குறையால்’ அணி செய்த காரியம்...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி சார்பில் மாற்று வீரராக பயிற்சியாளர் லூக் ரோங்கி களமிறங்கியுள்ளார்.

நியூசிலாந்து - இந்தியா இடையேயான 2வது ஒருநாள் போட்டி ஆக்லாந்தில் இன்று நடந்து முடிந்துள்ளது. போட்டியில் முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்டுக்கு 273 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 251 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன்மூலம் நியூசிலாந்து அணி இந்தத் தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் தோள்பட்டை காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகியுள்ள நிலையில், மற்றொரு வீரரான ஸ்காட் கக்கலீஜினும் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் போட்டியில் களமிறங்கவில்லை. இந்தப் போட்டிக்கு முன்பாக நியூசிலாந்து அறிவித்த ஒரே மாற்று வீரரான மிட்சல் சாண்ட்னரும் உடல்நிலை சரியில்லாததால் களமிறங்காத நிலையில், வீரர்கள் பற்றாக்குறை காரணமாக அந்த அணியின் பயிற்சியாளர் லூக் ரோங்கி இந்தப் போட்டியில் மாற்று வீரராகக் களமிறங்கியுள்ளார். இவர் கடைசியாக 2017ஆம் ஆண்டு அந்த அணிக்காக விளையாடியுள்ளார்.
ஆனால் இதுபோல பயிற்சியாளர் போட்டியில் களமிறங்குவது இது முதல் முறையல்ல. கடந்த மாதம் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரிலும் நியூசிலாந்து அணியின் வீரர்கள் காயத்தால் அவதிப்பட்டதால் அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பீட்டர் புல்டன் பீல்டிங் செய்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
