அடக்கடவுளே! 'காயத்தால்' அவதியுறும் முன்னணி வீரர்?... மோசமான 'சாதனைக்கு' காரணம் இதுதானாம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Feb 07, 2020 10:03 PM

இந்திய அணி முதல் ஒருநாள் போட்டியில் தோல்வி அடைந்ததற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், மோசமான பந்துவீச்சே முக்கிய காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் நாளைய இந்திய அணியில் குல்தீப், ஷர்துல் இருவருக்கும் பதிலாக சைனி, சாஹல் இருவரும் களமிறங்கலாம் என்று கூறப்படுகிறது.

IND Vs NZ: Kuldeep Yadav carrying a Shoulder Injury?

இந்த நிலையில் கடந்த போட்டியில் குல்தீப்பின் மோசமான பந்துவீச்சுக்கு தோள்பட்டையில் அவருக்கு ஏற்பட்டுள்ள காயமே காரணம் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதனால் தான் ஜனவரி 23, ஜனவரி 28 ஆகிய தேதிகளில் இந்திய அணி பயிற்சி செய்தபோது குல்தீப் அதில் இடம்பெறவில்லையாம். அதேபோல கடந்த போட்டியில் அவரது பந்துவீச்சு பெரிதாக தாக்கம் ஏற்படுத்தவில்லை என்பதற்கும் இதுவே காரணம் என்று கூறப்படுகிறது.

இதனால் நாளைய போட்டியில் அவருக்கு ஓய்வு கண்டிப்பாக வழங்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது எந்தளவு உண்மை என்பது தெரியவில்லை, எனினும் இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.