#WATCH #VIDEO: ‘ஏன் இப்டி பண்றீங்க’... ‘கடுப்பான விராட் கோலி’... ‘ஆக்ரோஷத்தில்’... ‘அம்பயருடன் கடும் வாக்குவாதம்’... ‘சப்போர்ட் செய்த ரசிகர்கள்’!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநியசிலாந்து அணிக்கு எதிரானப் போட்டியின்போது அம்பயரின் செயலால் கடும் கோபமடைந்த கேப்டன் விராட் கோலி வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆக்லாந்தில் இன்று நடந்த 2-வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு அந்த அணியின் மார்டின் குப்திலும், ஹென்றி நிக்கோல்ஸும் இணைந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 93 ரன்களை சேர்த்தனர். இந்தப் போட்டியில், 17-வது ஓவரை வீசிய சாஹல், அந்த ஓவரின் 5-வது பந்தில் நிக்கோல்ஸை வீழ்த்தினார். அம்பயர் எல்பிடபிள்யூ கொடுக்க, ஒருவழியாக முதல் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியை இந்திய வீரர்கள் கொண்டாடினர்.
இந்நிலையில், ரிவியூ கேட்பதற்கான 15 நொடிகள் முடிந்ததும், குப்திலுடன் பேசிவிட்டு பின்னர் நிக்கோல்ஸ் ரிவியூ கேட்டார். டி.ஆர்.எஸ் கேட்பதற்கு 15 நொடிகள் தான் காலக்கெடு. இதனால் பேட்ஸ்மேனோ அல்லது ஃபீல்டிங் அணியோ அதற்குள்ளாக முடிவெடுத்து ரிவியூ கேட்க வேண்டும். ஆனால் நிக்கோல்ஸ், சரியாக அந்த டைம் முடிந்ததும் ரிவியூ கேட்டதும், அம்பயரும் ஏற்றுக்கொண்டு, தேர்டு அம்பயர் ரிவியூ செய்ய சிக்னல் கொடுத்தார்.
ஏற்கனவே, முதல் விக்கெட்டை நீண்டநேரமாக எடுக்க முடியாத கடுப்பில் இருந்த கோலி, நிக்கோல்ஸ் அவுட்டுக்கு பின்னர் தான் சற்று ரிலாக்ஸ் ஆனார். இந்நிலையில், காலம் தாழ்ந்து நிக்கோல்ஸ் ரிவியூ கேட்டதும், அதை அம்பயரும் ஏற்றுக்கொண்டதால் செம கோபமான கோலி அம்பயருடன் வாக்குவாதம் செய்தார். எனினும், டிஆர்ஸ் முறையிலும் நிக்கோல்ஸ் அவுட் என வந்தப் பின்னரே கோலி நிம்மதியடைந்தார்.
— Sam sharma (@SMmPMm) February 8, 2020
