இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Feb 06, 2020 10:15 AM

1. அதிகார துஷ்பிரயோக புகாரில் இருந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டுகளை செனட் சபை நிராகரித்து விட்டது.

Today\'s Top News in One Line and One Minute Feb 06

2. நிர்பயா கொலை குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கிலிட அனுமதிக்க முடியாது என்று கூறி மத்திய அரசின் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

3. சபரிமலை கோவில் நிர்வாகம் தொடர்பான புதிய சட்டத்தை விரைவில் கொண்டு வர இருப்பதாக கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

4. குரூப் 2A தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

5. தஞ்சை பெரியகோவில், சென்னை மருந்தீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் நேற்று குடமுழுக்கு விழா நடைபெற்றது.

6. சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 10 காசுகள் குறைந்து ரூ.75.73-க்கும், டீசல் விலை ஒரு லிட்டருக்கு 13 காசுகள் குறைந்து ரூ.69.63-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

7. சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 560 ஆக உயர்ந்துள்ள நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

8. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ராப் பாடல் பாடிய அறிவு என்ற இளைஞரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டினார்.

9. கொரட்டூரில் நண்பரை குத்தி கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

10. இந்திய அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்  நேற்று வெற்றி பெற்றது.

11. துருக்கியில் பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்கச் சென்று மீண்டும் பனியில் சிக்கி 33 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

12. நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் நான்கு பேரில் ஒருவரான அக்‌ஷய் தாகூரின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார்.

Tags : #CRICKET #TOP #NEWS #ONE #LINE