'மொத' விக்கெட் காலி... காயம் காரணமாக 'ஐபிஎல்' தொடரில் இருந்து விலகிய 'முன்னணி' வீரர்... அதிர்ச்சியில் தவிக்கும் 'பிரபல' அணி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Feb 06, 2020 07:23 PM

காயம் காரணமாக வருகின்ற ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக பிரபல வீரர் ஜோப்ரா ஆர்ச்சர் அறிவித்து இருக்கிறார். இதனால் ராஜஸ்தான் அணி அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

Cricket Player Jofra Archer ruled out of IPL 2020, Details Here

முன்னணி பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஜோப்ரா ஆர்ச்சர் ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் அணிக்காக ஆடிவருகிறார். துல்லியமான பந்துவீச்சினால் முன்னணி பேட்ஸ்மேன்களை கதிகலங்க வைக்கும் ஆர்ச்சர் இங்கிலாந்து அணிக்காக விளையாடி வருகிறார். இந்த நிலையில் காயம் காரணமாக ஆர்ச்சர் இலங்கைக்கு எதிரான தொடர் மற்றும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு வெளியிட்டுள்ள பதிவில், “ஆர்ச்சரின் வலது முழங்கைப்பகுதியில் காயத்துக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில் எலும்பு முறிவு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதனால் ஐபிஎல் மற்றும் இலங்கை தொடர்களில் இருந்து விலகியுள்ளார். அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது,'' என்று அதில் தெரிவித்து இருக்கிறது.