அவருக்கு 'நெறைய' வாய்ப்பு குடுக்கணும்... களத்தில் 'குதித்த' மூத்தவீரர்... எது இன்னமுமா? இதுக்கு மேல தாங்க முடியாது குருநாதா!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் ஆல்ரவுண்டர் சிவம் துபேவுக்கு கேப்டன் கோலி கோலி எக்கச்சக்க வாய்ப்புகளை வழங்கினார். ஆனால் அவற்றை சரியாக பயன்படுத்திக் கொள்ளாத துபே பந்துவீச்சு, பேட்டிங் இரண்டிலும் மோசமாகவே செயல்பட்டார். குறிப்பாக கடைசி டி20 போட்டியில் ஒரே ஓவரில் 34 ரன்களை வாரி வழங்கி மோசமான சாதனை படைத்தார்.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் யுவராஜ் சிங் சிவம் துபேவுக்கு மேலும் வாய்ப்புகளை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், '' சிவம் துபேவுக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கிறது என நினைக்கிறேன். அதனால் அவருக்கு நாம் கூடுதலாக வாய்ப்பு கொடுக்க வேண்டும். தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கும் பட்சத்தில் ஒரு சிறப்பான வீரராக அவர் உருவாவதை நாம் பார்க்கலாம்,'' என தெரிவித்து இருக்கிறார்.
இன்றைய போட்டியில் நாம் ஜெயித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பதால் கோலி இளம்வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவாரா? என்பது தெரியவில்லை. எனவே கோலி வாய்ப்பு அளிக்கிறாரா? இல்லை பெஞ்சில் அமர வைக்கிறாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
