VIDEO: தம்பி! நம்பி எடுத்துருக்கேன்... சாப்ட்டு நல்லா 'வெளையாடணும்' சரியா?... ஸ்பெஷல் 'பானிபூரி' செய்து கொடுத்த கேப்டன்... யாருக்குனு பாருங்க!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவருகின்ற மார்ச் மாதம் 29-ம் தேதி ஐபிஎல் தொடர் ஆரம்பிக்க இருக்கிறது. சுமார் 8 மாதங்களுக்குப்பின் தோனி சென்னை அணிக்காக விளையாடுவதை காண ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் அவரோ மனைவி, நண்பர்களுடன் இணைந்து மாலத்தீவில் ஜாலியாக ஊர் சுற்றிக்கொண்டு இருக்கிறார்.

இந்த நிலையில் கிரிக்கெட் வீரர்கள் ஆர்.பி.சிங், பியூஷ் சாவ்லா இருவருக்கும் தோனி பானிபூரி செய்து கொடுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் பானிபூரி கடையொன்றில் ஆர்.பி.சிங், சாவ்லா இருவரும் பானிபூரி சாப்பிடுகின்றனர். அதைப்பார்க்கும் தோனி கடைக்காரரின் அருகில் நின்றுகொண்டு இருவருக்கும் ஆளுக்கொரு பானிபூரியை செய்து கொடுக்கிறார்.
Straight outta Maldives, our rockstar is seen making a couple of pani puris!👨🍳
Our favorite chat just became even more delectable! 🥰🤤#MahiInMaldives #Dhoni @msdhoni pic.twitter.com/NFjGcuMT1h
— MS Dhoni Fans Official (@msdfansofficial) February 4, 2020
இதைப்பார்த்த ரசிகர்கள் இப்படியொரு வாய்ப்பு தங்களுக்கு கிடைக்கவில்லை என்று ஏக்கத்துடன் தெரிவித்து வருகின்றனர். கடந்த ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் பியூஷ் சாவ்லாவை 6.5 கோடிக்கு சென்னை அணி ஏலத்தில் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முக்கிய காரணம் தோனி என்பதால் நடப்பு ஐபிஎல்லில் பியூஷ் சாவ்லாவின் ஆட்டத்தைக் காண, ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கின்றனர்
