அந்த 'ரெண்டு' பேரையும் தட்டித் தூக்குறோம்... நியூசிலாந்தை ஜெயிக்குறோம்... 'டக்கரான' பிளானுடன் களமிறங்கும் கேப்டன்?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Feb 07, 2020 08:59 PM

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி சற்றும் எதிர்பாராத வகையில் தோல்வி அடைந்தது. 347 ரன்கள் அடித்தும் இந்திய அணி வெற்றி பெறாததால் ரசிகர்கள் தீவிர கவலையில் ஆழ்ந்துள்ளனர். குறிப்பாக இந்திய வீரர்களின் மோசமான பவுலிங்கும், பீல்டிங்குமே இந்த தோல்விக்கு காரணமாக அமைந்தது.

India predicted XI for second ODI, Kohli make two Changes

இந்த நிலையில் நாளை நடைபெறவுள்ள 2-வது ஒருநாள் போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இதில் கட்டாயம் வென்றாக வேண்டும் என்னும் நிலையில் இந்திய அணி உள்ளது. இதனால் அணியில் சில மாற்றங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் நாளைய போட்டியில் குல்தீப், ஷர்துல் இருவருக்கும் பதிலாக நவ்தீப் சைனி, சாஹல் இருவருடன் கோலி களமிறங்குவார் என கூறப்படுகிறது.

பேட்டிங்கில் மிகவும் வலிமையாக இருப்பதால் பந்துவீச்சை மட்டும் சற்று மேம்படுத்தி கொண்டால், இந்திய அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகி விடும். அந்த வகையில் நாளை புதிய பந்துவீச்சாளர்களுடன் களத்தில் குதிப்பாரா? இல்லை அதே அணியுடன் இறங்குவாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

மறுபுறம் வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக முதல் போட்டியில் தோல்வியுற்ற இந்திய அணி அடுத்த 2 போட்டிகளை வென்று ஒருநாள் தொடரை வெற்றிகரமாக கைப்பற்றியது. அதேபோல அடுத்த 2 போட்டிகளையும் இந்திய அணி வென்று இந்த ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் என்று ரசிகர்கள் அதீத நம்பிக்கையுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.