ஐபிஎல்லில் இருந்து 'திடீரென' விலகிய முன்னணி வீரர்... அவர் கண்டிப்பா 'வருவாரு'... நாங்க 'வெயிட்' பண்றோம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Feb 08, 2020 01:24 AM

ஐபிஎல்லில் கோப்பை வென்று கிட்டத்தட்ட 11 வருடங்கள் ஆகிவிட்டதால் இந்த வருடம் எப்படியும் கப்பை வெல்ல வேண்டும் என ராஜஸ்தான் அணி திட்டமிட்டுள்ளது. ஆனால் காயம் காரணமாக அந்த அணியின் முன்னணி பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் இந்த வருட ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறார்.

IPL 2020: Rajasthan Royals in no rush to replace Jofra Archer

இதனால் ராஜஸ்தான் ரசிகர்கள் மிகுந்த வேதனையுடன் உள்ளனர். ஆனால் ஆர்ச்சர் நிச்சயம் வருவார் என அந்த அணி நம்பிக்கையுடன் காத்துக்கொண்டு இருக்கிறது. இதுகுறித்து அந்த அணி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், '' ஆர்ச்சர் விரைவாக குணமடையும் வகையில் நாங்கள் வேலை செய்து வருகிறோம். இந்த வருடம் அவர் ராஜஸ்தான் ஜெர்ஸியை அணிந்து விளையாடுவார்,'' என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்து இருக்கிறது.

இதுகுறித்து அந்த அணியின் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு கூறுகையில், '' ஆர்ச்சர் ஐபிஎல் தொடரில் விளையாட விரும்புவார் என்பதை என்னால் உறுதியாக கூற இயலும். தற்போது காயம் குறித்த செய்தி மோசமானதாக இருக்கலாம். ஆனால், தற்போதைய நேரம் வரை அவரை மாற்றுவதற்கான எந்த துரித நடவடிக்கையையும் எடுக்க மாட்டோம். அவர் குணமடைவார் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு உள்ளது,'' என தெரிவித்து இருக்கிறார்.