'மதம் எதுவாயினும்.. மனிதையின் வீரம் இதுதான்'.. 'பொட்டில் அடிச்ச மாதிரி நிரூபிச்ச சிங்கப்பெண்கள்'.. நெகிழவைத்த வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Siva Sankar | Oct 31, 2019 10:57 AM
ஆன்மீகம் என்பது மனிதத்தை தாண்டிய ஒரு இறை நிலையை உணரும் தருணத்தின் அனுபவம்.
அந்த அனுபவம் தனிமனிதருக்கு மட்டுமே சொந்தமானதாக இருக்கும்போது ஆன்மீகமாகவும், அதற்கான பயிற்சியை பெருவாரியான மக்களுக்குக் கொண்டு சேர்க்கும்போது மதமாகவும் உருமாறுகிறது.
எது மாறினாலும் மனிதம்தான் மதத்தின் வழியே கடத்தப்பட வேண்டியது, அன்புதான் ஆன்மீகத்தின் வழியே அறியப்படவேண்டியது என்ற உண்மைக்கு இலக்கணமாக விளையாட்டுப் போட்டி ஒன்றில் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
பெண்கள் கால்பந்து விளையாட்டுப் போட்டி ஒன்றில், ஜோர்டான் நாட்டு வீராங்கனையின் தலையில் இருந்த ஹிஜாப் கழன்றதால், எதிரணியில் விளையாடிக் கொண்டிருந்த கிறிஸ்தவ நாட்டு வீராங்கனைகள், ஜோர்டான் நாட்டு வீராங்கனை தனது ஹிஜாப்பை சரிசெய்ய உதவும் வகையில், அவரைச் சுற்றி நின்றுகொண்டு மறைக்கிறார்கள் .
பெண்கள் கால்பந்து. ஜோர்டான் நாட்டு வீராங்கனையின் தலை ஹிஜாப் கழன்றதால், எதிரணி கிறிஸ்தவ நாட்டு வீராங்கனைகள், ஹிஜாப்பை சரிசெய்ய சுற்றி மறைக்கிறார்கள் . அன்பு பண்பு குணம் மனிதநேயம் இவை அனைத்தும் மனிதனிடம் உருவாக உருவானது மதம் . மதம் எதுவாயினும் மனிதனாக இரு . pic.twitter.com/mWKpQF9kJe
— சிவஸ்ரீ (@Indian51900331) October 29, 2019
அனைவரையும் நெகிழவைத்துள்ள இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.