'கொல காண்டான கஸ்டமர்'.. 'ஹோட்டல் கிச்சனுக்குள் புகுந்து களேபரம்!'.. பெண் ஊழியர் கொடுத்த பாலியல் புகார்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Oct 30, 2019 04:13 PM

மத்தியப் பிரதேசம் போபாலில் உணவு ஆர்டர் பண்ணிவிட்டு வெகுநேரம் ஆகியதால், கடுப்பான கஸ்டமர் கிச்சனுக்குள் சென்று அடித்து உடைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Scuffle broke out between customers & staff at restaurant

மத்தியப் பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றில், உணவு ஆர்டர் செய்த கஸ்டமர், கடுப்பாகியுள்ளார். உடனே கிச்சனுக்குள் சென்று ஆய்வும் செய்துள்ளார். அப்போது உணவின் தரமும் மோசமாக இருப்பதாகக் கூறி உடனே அங்கிருந்த ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் முற்றி கஸ்டமரும், உணவக ஊழியர்களும், சமையலாளர்களும் சரமாரியாகத் தாக்கிக் கொண்டுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வலம் வருகிறது.

 

இதுகுறித்த போலீஸ் விசாரணையில் கஸ்டமரின் நடத்தை சரியில்லை என்றும், மேலும் தகராறின்போது அந்த ஹோட்டல் பெண் ஊழியரை தகாத முறையில் அந்த கஸ்டமர் பாலியல் சீண்டல் செய்ததாகவும் ஹோட்டல் தரப்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

 

Tags : #VIDEOVIRAL #RESTAURANT #CLASH #BHOPAL