தோழியுடன் பேசிக்கொண்டிருந்த இஞ்ஜினியரிங் மாணவரை ஆற்றில் தூக்கி வீசிய கும்பல்..! திருச்சி அருகே பரபரப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Oct 31, 2019 10:31 AM

திருச்சி அருகே தோழியுடன் பேசிக்கொண்டிருந்த இஞ்ஜினியரிங் மாணவரை சிலர் ஆற்றில் தூக்கி வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trichy Engineering student falls into river after chased by a gang

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றின் மணல் திட்டில் ஜீவித் (20) என்ற பொறியியல் கல்லூரி மாணவர் அவரது தோழி ஒருவருடன் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கே வந்த 5 பேர் கொண்ட கும்பல், ஜீவித்தை தாக்கி ஆற்றில் தூக்கி வீசியதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த மாணவியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளனர்.

இதனை அடுத்து அந்த நபர்களிடம் இருந்து தப்பித்த மாணவி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து கொள்ளிடம் ஆற்றுக்கு விரைந்த போலீசார், மீட்பு படையின் உதவியுடன் மாணவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தோழியுடன் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவரை 5 பேர் கொண்ட கும்பல் ஆற்றில் தூக்கி வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #COLLEGESTUDENTS #RIVER #TRICHY #ENGINEERING #KOLLIDAM